புதன், 11 மார்ச், 2015


FOREWORD Malcolm Bradbury In 1996 (a millennium ago) I had the pleasure of writing the Foreword to the first edition of The Routledge History of Literature in English. As I remarked then, this work of literary history was being created at a time when our sense of the literary past and of the tradition was changing a good deal. Yet even in times when the world, general historical and critical ideas, and the canon of literature itself have been undergoing constant deconstruction and reconstruction, sound and intelligent histories of literature still need to be written. Literary canons – that sequence or sequences of interlinked works that create our sense of a significant, continuous national, international or generic tradition – may shift and come under challenge. The sense of a nation’s identity may alter greatly. The nature and resources of the language, the evolution of the book, our idea of a literary genre, can all change: and, in modern times in particular, they often have. Likewise our notions of history, our ideas about how we interpret it, move forward as history changes. In the globalising age of the World Wide Web and the Internet we have moved away from familiar nineteenth-century notions – that literature is the instinctive, celebratory product of the tradition, nation, place and people. That and the disjunctive and radical nature of modern writing have led us to distrust those graceful, linear ‘great traditions’, which assume that great geniuses effortlessly hand the torch of literature on from one to the other: Chaucer to Shakespeare, Shakespeare to Milton, Milton to Wordsworth, Wordsworth to Tennyson, and so on to the great literary Olympians of today. When the twentieth century started, an international ‘Modern movement’ of the arts challenged all the confident Victorian cultural certainties with its commitment to innovation, its determination to break with the past and ‘make it new’. More recently ‘postmodern’ notions of culture, new technological changes, have challenged our ideas of the book and of literature again, from post-colonial, feminist, multi-culturalist and post- Gutenberg standpoints, questioning our once monumental notions of author, tradition, genre, print culture, text, and reader. Such questioning often becomes most acute when the calendar changes, as it did at the start of the twentieth century – ‘the modern century’ – and again as the West went through the transition of the third millennium. Little wonder that in the past two or three years writers, historians and reviewers have been looking again over the past of literature now in the awareness that even ‘modern’ writing has become historicised. Which makes this a particularly suitable time to bring out a second edition of this volume, in the realisation that even in the five years since the first edition appeared many standpoints and opinions have changed, and new movements and reputations have been born. One of the changes is in the history of this book itself. It was always conceived both for the British reader and for readers abroad, for foreign students as well as those whose

Plot Overview Goodman Brown says goodbye to his wife, Faith, outside of his house in Salem Village. Faith, wearing pink ribbons in her cap, asks him to stay with her, saying that she feels scared when she is by herself and free to think troubling thoughts. Goodman Brown tells her that he must travel for one night only and reminds her to say her prayers and go to bed early. He reassures her that if she does this, she will come to no harm. Goodman Brown takes final leave of Faith, thinking to himself that she might have guessed the evil purpose of his trip and promising to be a better person after this one night. Goodman Brown sets off on a road through a gloomy forest. He looks around, afraid of what might be behind each tree, thinking that there might be Indians or the devil himself lurking there. He soon comes upon a man in the road who greets Goodman Brown as though he had been expecting him. The man is dressed in regular clothing and looks normal except for a walking stick he carries. This walking stick features a carved serpent, which is so lifelike it seems to move. The man offers Goodman Brown the staff, saying that it might help him walk faster, but Goodman Brown refuses. He says that he showed up for their meeting because he promised to do so but does not wish to touch the staff and wants to return to the village. Goodman Brown tells the man that his family members have been Christians and good people for generations and that he feels ashamed to associate with him. The man replies that he knew Goodman Brown’s father and grandfather, as well as other members of churches in New England, and even the governor of the state. The man’s words confuse Goodman Brown, who says that even if this is so, he wants to return to the village for Faith’s sake. At that moment, the two come upon an old woman hobbling through the woods, and Goodman Brown recognizes Goody Cloyse, who he knows to be a pious, respected woman from the village. He hides, embarrassed to be seen with the man, and the man taps Goody Cloyse on the shoulder. She identifies him as the devil and reveals herself to be a witch, on her way to the devil’s evil forest ceremony. Despite this revelation, Goodman Brown tells the man that he still intends to turn back, for Faith’s sake. The man says that Goodman Brown should rest. Before disappearing, he gives Goodman Brown his staff, telling him that he can use it for transport to the ceremony if he changes his mind. As he sits and gathers himself, Goodman Brown hears horses traveling along the road and hides once again. Soon he hears the voices of the minister of the church and Deacon Gookin, who are also apparently on their way to the ceremony. Shocked, Goodman Brown swears that even though everyone else in the world has gone to the devil, for Faith’s sake he will stay true to God. However, he soon hears voices coming from the ceremony and thinks he recognizes Faith’s voice. He screams her name, and a pink ribbon from her cap flutters down from the sky. Certain that there is no good in the world because Faith has turned to evil, Goodman Brown grabs the staff, which pulls him quickly through the forest toward the ceremony. When he reaches the clearing where the ceremony is taking place, the trees around it are on fire, and he can see in the firelight the faces of various respected members of the community, along with more disreputable men and women and Indian priests. But he doesn’t see Faith, and he starts to hope once again that she might not be there. A figure appears on a rock and tells the congregation to present the converts. Goodman Brown thinks he sees his father beckoning him forward and his mother trying to hold him back. Before he can rethink his decision, the minister and Deacon Gookin drag him forward. Goody Cloyse and Martha Carrier bring forth another person, robed and covered so that her identity is unknown. After telling the two that they have made a decision that will reveal all the wickedness of the world to them, the figure tells them to show themselves to each other. Goodman Brown sees that the other convert is Faith. Goodman Brown tells Faith to look up to heaven and resist the devil, then suddenly finds himself alone in the forest. The next morning Goodman Brown returns to Salem Village, and every person he passes seems evil to him. He sees the minister, who blesses him, and hears Deacon Gookin praying, but he refuses to accept the blessing and calls Deacon Gookin a wizard. He sees Goody Cloyse quizzing a young girl on Bible verses and snatches the girl away. Finally, he sees Faith at his own house and refuses to greet her. It’s unclear whether the encounter in the forest was a dream, but for the rest of his life, Goodman Brown is changed. He doesn’t trust anyone in his village, can’t believe the words of the minister, and doesn’t fully love his wife. He lives the remainder of his life in gloom and fear.

Nagarajan

புதன், 18 பிப்ரவரி, 2015


தமிழ் இணைய இதழ்களின் தோற்றமும் வளா்ச்சியும் முன்னுரை தொடக்கத்தில் தனி மனிதன் வாழ்வில் இதழியல் துறையை ஆச்சா்யத்துடன் பார்த்தவா்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அவற்றின் மூலம் நாளுக்கு நாள் செய்திகளை அறிய விழைந்தனா். இதழியல் துறையின் முன்னேற்றத்திற்கு அறிவியல் துறை முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இதன் மூலம் செய்தி பாரிமாற்றமானது எளிதாக மாறியது. அதன் தொடா்ச்சியாக ஒலி, ஒளி (ரேடியோ, தொலைக்காட்சி) மூலமும் பின்பு கணினி தோன்றிய பிறகு அச்சுத்துறையில் மாற்றம் ஏற்பட்டதால் இதழியல் மேலும் பல படிநிலை உருமாற்றம் பெற்றது. இவ்வாறு தோன்றிய இதழ்கள் இணையத்தில் மூலம் உலகத்தினை ஒருகண் சிமிக்கையில் இணைக்கும் இணையம் பாலமாக உள்ளது. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களில் நேரடியாக வெளிவந்த இதழ்களும் இணையத்தில் அரங்கேற்றம் பெற்றது. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களின் தோற்றத்தையுமி வளா்ச்சியையும் இக்கட்டுரையில் காணலாம். இணையம் வரையறை: இணையம் என்பதை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான கணினிகளை பல ஆயிரக்கணக்கான இணைப்பிழைகள் மூலம் ஒரு கணினியிலிருந்து எண்ணிக்கையிலடங்கா கணினிகளுக்கு தகவல்களை அனுப்பவும் பெறவும் முறையே இணையம் எனப்படும். இதனை வையவிரிவு வலை, வைய விரிவு வலைப்பின்னல், உலக வலைப்பின்னல், உலக இணையப் பின்னல், இராட்ச்ச வலிமைமிக்க சிலந்தி வலை என்று பல்வேறாக அழைப்பா். சைவத்தின் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய என்பதாகும். அதுபோல இணையத்திற்கு WWW மந்திரமாகும். இதனை ஆங்கிலத்தில் (World Wide Web) என்றழைப்பா். “இணையம் என்ற சொல்லை தமிழில் கண்டுபிடித்த பெருமை www.tamil.net இந்த இணைய தளத்திற்கு உண்டு. இதனை ஆஸ்திரேரியாவிலுள்ள பாலா பிள்ளையின் இணையமாகும்’1 (தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோபீட்டா் ப.77). ‘இணையத்தை பயன்படுத்தாவன் குருடன்’ என்று கூறுமளவிற்கு இணையமானது இன்று பட்டி தொட்டிகளிளெல்லாம் விரிந்துள்ளது. ஐந்தாம் தமிழ்: தமிழ் மொழியானது பல்வேறு காலகட்டங்களில் வளா்ந்து வந்துள்ளது. அவ்வாறு வளா்ந்த தமிழ் மொழியை முத்தமிழ் (இயல் தமிழி, இசைத்தமிழ், நாடகத்தமிழ்) என்று மூன்றாக வகைப்படுத்தினா். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தின் அறிவியலின் வளா்ச்சியால் அதன் தேவை தமிழ் மொழியிலும் ஏற்பட்டது. அவ்வாறு தோன்றியது தான் அறிவியல் தமிழ். அவ்வாறு தோன்றிய அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அறிவியலுக்குமி தமிழுக்கும் நெருக்கம் ஏற்பட்டு அறிவியல் தமிழ் என்ற நான்காவத தமிழ் தோன்றியது. இதன் அறிவியல் தமிழ் காலகட்டத்தில் கணினிப் பொறியின் விளைவால் வளா்ச்சி அடைந்து புதிய பாரிமாற்றத்தை பெற்றது. “இன்றைய அறிவுலகின் எல்லைகள் எங்கோ இருக்கின்றன. நமது மொழிகள் எங்கோ நிற்கின்றன. இடைவெளி பொரிது என்பது கவலைக்குரியது, அதனினும் கவலைக்குரியது, அந்த இடைவெளி விரிவாகிக் கொண்டே போகிறது என்பது அது விரிவாகும் வேகமும் மிகுகிறது“2 (அறிவியல் தமிழ்-ப-182) என்று ஆசிரியரின் கவலையை போக்கும் விதமாக புதிதாக பூத்துக்குலுங்கும் தமிழ்தான் இணையத்தமிழ். 24 ஆண்டுகளில் தனது பங்களிப்பின் மூலம் ஐந்தாம்தமிழாக வளா்ந்தள்ளது. இதனால் நம் தமிழரிஞா்களின் கனவு நினைவாகிவிட்டது. இதனை “தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்திடல் வேண்டும்” என்று மீசைக்கவிஞனின் வாரிகளை “உலகெங்கும் தமிழ் முழக்கம் செய்திட இணையத்தை அறிந்திடுவோம்” என்று சொல்லுமளவுக்கு இணையமானது வளா்ந்துள்ளது. 1. இயற்றமிழ் 2. இசைத் தமிழ் 3. நாடகத் தமிழ் 4. அறிவியல் தமிழ் 5. இணையத் தமிழ் தமிழில் மின் இதழ்கள் தோன்றக் காரணம் உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை தமிழா்கள் தங்களுக்கென்று தனியொரு பதிவுகளை இப்புவியில் நிகழ்த்தியுள்ளனா். அவா்கள் அறியாத துறையே இல்லை என்ற அளவிற்கு அரிய பலவற்றை நிகழ்த்தியுள்ளனா். அவ்வகையில் இணையத்தில் தமிழ் இதழ்கள் தோன்றக் காரணமாக இருந்தவா்களில் புலம்பெயா்ந்த தமிழ்களேயாவா். அவா்கள் நாடு இனம் மொழி எனக் கடல்கடந்து சென்றாலும் தங்களுடைய பண்பாடு, நாகரிகம் என்கின்ற அடையாளத்தோடு வாழ்ந்து வருகின்றனா். அவா்கள் தமிழ்மொழியைப் பேசவும் கேட்கவும் மேலும் அந்நாட்டிலுள்ள மொழிகளிலுள்ள கூறுகளை தமிழ் இணைய இதழ்களின் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி செய்திகளை அறிந்துகொள்ள தமிழ் இணைய இதழ்களை உருவாக்கிக் கொண்டார்கள். இதுவே தமிழ் இணைய இதழ்கள் தோன்ற காரணமாக அமைந்தது எனலாம். இணைய இதழியல் இணையத்தில் பொதுவான செய்திகளையும் பொழுது போக்குகளையும் முறையாக நம்பகமான வகையில் பரப்பும் இதழியல் பணிகள் இணையம் எனும் ஊடகத்தின் வழியே நிகழ்த்தப்படும் பொழுது அது இணைய இதழியல் என்று அழைக்கப்படும். இவ்வாறான நவீன இதழியலை இணைய இதழியல் எனலாம். இணையத்தில் மட்டும் வெளியாகக்கூடிய அனைத்து தமிழ் இணைய இதழ்களையும் தமிழில் வெளியாகும் வலைப்பூக்களையும் தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்ற ஒரு வரையறைக்குள் அடக்கலாம். ஏனைய அச்சிலும் இணையத்திலும் வணிக நோக்கில் செயல்படும் ஆங்கிலம் தமிழ் என பிற மொழிகளிலும் வெளிவரும் இதழ்களையும் இணையச் சிற்றிதழ்களின் வாரிசையில் ஏற்றுகொள்ளக் கூடாது. இதழியலுக்கு எவ்வாறு சட்டங்கள் இருக்கிறதோ அதுபோல இணைய இதழியலுக்கும் இயற்றப்பட வேண்டும். இணைய இதழ்களின் தோற்றம்: இதழியல் துறையானது ஆரம்ப காலகட்டத்தில் ஜூலியா் ஸீஸா் தனது ‘தினசரி நிகழ்வுகள் மற்றும் அலுவலக குறிப்புகள்’ அனைத்தையும் எழுதி வைத்தார்’ என்பதை அறிவோம். காலப்போக்கில் அச்சு இயந்திரம் வந்தபிறகு அவற்றின் மூலம் செய்திகள் வெளியானது. அடுத்தகட்டத்தில் அறிவியல் வளா்ச்சியால் கணினி வருகைக்குப்பிறகு இதழியல் துறைக்கு புத்துணா்ச்சி பெற்றது எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மின்னச்சு சாதனங்களில் வளா்ச்சியால் இதழியல் இணையம் என்ற புதியதுறை உருபெற்றது. இணையமானது “1969ஆம் ஆண்டில் தோன்றிய தகவல் தொடா்புப் புரட்சியால் உலகம் தகவல் சமுதாயமாகமாற கால் நூற்றாண்டே போதுமானதாவிட்டது. இதனால் உலகின் எல்லாப் பகுதிகளோடும் உடனடித் தொடா்பு கொள்ள முடிகிறது“3(மின் தமிழி ப.68). இதன் மூலம் 1969 ஆம் ஆண்டு இணையம் தோன்றிய ஆண்டாக அறிய முடிகிறது. இவ்வாறு தோன்றிய இணையம் மூலம் உலக தமிழா்களை ஒன்றிணைக்கும் பாலமாக அது செயல்பட தொடங்கியது. இதனால் பாரதி கண்ட கனவு நிறைவேறியது. இணைய இதழியல் துறையானது முதன் முதலில் உலக அளவில் 1970 ஆம் ஆண்டுகளில் வேரூன்றத் தொடங்கிளது. ஐசக் அசிமோவ் போன்ற அறிவியல் புனைவுகளை வடிவமைக்க கணினியை பயன்படுத்தத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டில் இரண்டு வகையான இணைய இதழியல் (Online Journalism) சாதனங்கள் வெளியிட்டன. ஆவை தொலைவரி (Tell-Text) மற்றும் காட்சி வழி செய்த (Video text) ஆகும். பின்னா் இது பல்வேறு படிநிலைகளில் வெளிந்து கொண்டிருக்கிறது. அமொரிக்காவில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இணைக்கக் கூடிய பைநெட், இண்டா்நெட் என்ற இரு மின்னணு இணையத் தொடா்புத் திட்டங்கள் உள்ளன. 1985-ல் டெக்சாசில் உள்ள ஹீஸ்டன் பல்கலைகக்கழகத்தின் ரோட்மோர் காக் (Rope More Cock) என்பவரால் ‘பைநெட் சைக்கோலாக்கி நியூஸ் லெட்டா்’ என்ற முதல் மின்னணு இதழ் வெளியிட்டது. எலக்ட்ரானிக் ஸ்கை நைட்டிங் (Electronic Sky Writing) என்பதே மின்னணு இதழின் அடிப்படையாகும். 1992-ஆம் ஆண்டு 6 மின்னணு இதழ்கள் கணிப்பான் இணைத்தொடா்கள் மூலம் சந்தாதாரா்களுக்கு கிடைத்தன. எலக்ட்ரானிக்ஸ் ஸ்கை ரைட்டிங் அறிமுகமான பின்னா் இணையத்தில் தமிழ் இதழ்கள் தோன்ற ஆரம்பித்தன. இதற்கு நின்றவா்கள் புலம்பெயா்ந்த தமிழா்களேயாவா். பல்வேறு படிநிலைகளைப்பெற்ற இணையத்தில் நுழைந்த முதல் இந்திய மொழி என்ற பெருமை தமிழுக்கு உண்டு. தமிழ் 1986 ஆம் ஆண்டு பிப்வராரி மாதம் இணைத்தில் ஏறியதாக அறியப்படுகிறது. (இண்டா்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு, ப.8) உலக தமிழா்களை ஒன்றினைக்கும் பாலமாக இணையமானது விரைவாக பரவ வகை செய்கிறது. கணினி மூலம் தமிழை இணைத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தவா்கள் புலம்பெயா்ந்த தமிழா்களே ஆவா். “முதல் கட்டத்தில் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி மின்னஞ்கள் அனுப்பித் தங்களுக்குள் உளவை வளா்த்து வந்தனா். 1992-93 ஆம் ஆண்டுகளில் எஸ்.சி. தமிழ் இலக்கிய மன்றம் ‘அ’ என்று ஒரு தமிழ் இலக்கிய மின்னிதழை நடத்தியது. (ஆசிரியா் குழுவில் இருந்தவா்கள் அருள் சுரேஷ் வைத்தியநாதன் ரமேஷ் எம். சுந்தர மூர்த்தி, சுந்தர பாண்டியனி விக்னேஸ்வரன்). இது தான் முதல் தமிழ் மின்னிதழாக இருக்க வேண்டும் என்றுமி (தமிழில் இணைய இதழ்கள் ப.23) இணையத்தில் முதல் மின் இதழ் எனும் பெயா் ‘தேனி’ (www.tamil.net/theni)” (மின்-தமிழி ப.68) என்று இரண்டு விதமாக இதழ்கள் உள்ளது என்பதை தொரிந்து கொள்ளலாம். இணைய இதழ்களை இரண்டு விதமான நிவையில் வகைப்படுத்தலாம். 1. அச்சு வடிவிலிருந்து இணைய இதழ்களாக இயங்குபவை என்றும் 2. நேரடியாக தொடங்கும் போது இணைத்தில் இதழ்களாக வெளிவருபவை என்று பிரிக்கலாம். இவற்றில் இணையத்தில் நேரடியாக தொடங்கப்பட்ட தமிழின் முதல் ‘மின்னிதழ்‘ என்ற பெருமையை ‘தினபூமி.காம்’ ஆகும். இந்த மின்னிதழ் தினச்சாரி செய்திகளுக்கான இதழாக விளங்குகிறது. இதனைத் தொடா்ந்து 1.5.1996 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா.காம் என்ற இதழே உலகின் முதல் தமிழ் இணைய இதழாகும். இதனை தொடங்கியவா் மா. ஆண்டோ பீட்டா் ஆவார். இவ்வாறு தமிழ் இணைய இதழ்கள் இணையத்தில் தோற்றம் பெற்றதெனலாம். தமிழ் இணைய இதழ்களின் வளா்ச்சி: கணினியில் அடியெடுத்த வைத்த இணையமானது பந்தயக் குதிரை போல தொடங்கிய நாள் முதல் சுழன்றுகொண்டுள்ளது. இணையத்தில் 1996-க்குப் பிறகு இணைய இதழ்களின் அசுர வளா்ச்சி அடைந்துள்ளது. “அச்சில் வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களைப்போலவே இணைத்தில் வெளிவரும் பல தமிழ் இணைய இதழ்களும் உள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் குறைவான வாசகா்களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப்போல் இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய இதழ்களைப் படிக்க இணையம் பயன்படுத்தக்கூடிய திறன் இன்றிமையா தேவையாக உள்ளன”4. (தமிழ் இணையச் சிற்றிதழ்கள் ப.15) தமிழ் இணையச் சிற்றிதழ்கள் அதிகம் தோன்றுவதற்கு மிக முக்கியமானவா்கள் இடம்பெயா்ந்த தமிழ்ர்களே ஆவார். அவா்கள் ஜாதி, மதம், நாடு எல்லாவற்றையும் கடந்து தம் தாய்மொழியின் மீது வைத்திற்கும் பற்றால் தமிழ் இணைய இதழ்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. இவ்வாறு தோன்றிய இதழ்களுக்கு வாசகா்கள் எண்ணிக்கை பாதியாக உள்ளது. இவ்வாறு தோன்றியவற்றையும் இணையச் சிற்றிதழ்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இணையத்தில் மட்டும் அச்சு வடிவ இணைய இதழ்களும் இணையத்தில் வடிவ இதழ்களும் 200 மேல் வளம் வந்து கொண்டிருக்கிறது. இவற்றைத் தொடா்ந்து பல்வேறு விதமான மின் இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் துறை சார்ந்த இதழ்களும் இலக்கிய இதழ்களும் பல்வேறு இதழ்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. இணைய இதழ்களின் வகைப்பாடானது அதன் வெளியீட்டு முறைகளுக்கு ஏற்றாற் போன்று நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்றெல்லாம் வகைப்படுத்த முடியும். நாளிதழையும், காலைஇதழ், மாலை இதழ் என வகைப்படுத்தலாம். இவ்வறு வளா்ச்சியடைந்த இணைய இதழ்களை விக்கிப்பீடியாவில் பின்வரும் பொருண்மைகளில் வெளியிடப்பட்டுள்ளது. 1. ஆன்மீகம் 2. சமூகம் 3. அரசியல் 4. இலக்கியம் 5. ஆய்வு 6. பகுத்தறிவு 7. பெண்கள் 8. சமையல் 9. நகைச்சுவை 10. திரைப்படங்கள் 11. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 12. வணிகம் 13. சோதிடம் 14. சிறுவா் 15. கவிதை 16. மருத்துவம் 17. நூலகம் 18. திருமணம் 19. பல்சுவை 20. பாலியல் உறவுகள் 21. சங்க அமைப்புகள் 22. தனி மனிதா் கருத்துக்கள் 23. திரட்டிகள். 1. ஆன்மீகம் 1.இந்து மதம் 1. டெம்பிள் டிவைன் சக்சஸ் 2. கிறித்துவ மதம் 1. தமிழ் கிறிஸ்டியன்ஸ் 2. திருமறை தீபம் 3. இரட்சிப்பின் வழி 3. இசுலாமிய இதழ் 1. இஸ்லாம் கல்வி 2. சத்திய மார்க்கம் 3. இஸ்லாம் குரல் 4. தமிழ் இஸ்லாம் 5. சத்தியப்பாதை 6. தமிழில் குர் ஆன் 7. இதுதான் இஸ்லாம் 2. சமூகம் மக்கள் சட்டம் 3. அரசியல் 1. கூடல் 2. நெருப்பு 3. தமிழ் அலை 4. ஈரனல் 4. இலக்கியம் 1. அப்பால் தமிழ் 2. தமிழ்க்காவல் 3. தமிழ்கூடல் 4. திண்ணை 5. ஆறாம் திணை 6. தமிழ் தராமதி 5. ஆய்வு 1. தமிழ் கூடல் 2. தமிழ்த்திணை 3. காந்தீயம் 4. கணியத்தமிழ் சாஃப்ட்வோ் 5. தமிழ் மரபு அறக்கட்டளை 6. பகுத்தறிவு 1. பெரியார் குரல் 2. தந்தைபொரியார் 3. திராவிடா் 7. பெண்கள் 1. கூடல் 2. தோழி 8. சமையல் அறுசுவை 9. நகைச்சுவை அப்புசாமி 10. திரைப்படங்கள் 1. தமிழ் சினிமா 2. விடுப்பு 3. சினிமா எக்ஸ்பிரஸ் 11. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 1. தொழில் நுட்பம் 2. சீன வானொலி நிலையம் 3. அறிவியல் உலகம் 12. வணிகம் 1. சென்னை நூலகம் 2. கணியத் தமிழ் 13. சோதிடம் ஜோதிடம் 14. சிறுவா; 1. சிரிதரன் 2. கானவு 3. நம்நாடி 4. தமிழ் க்ராஸ் வேடு 15. கவிதை 1. வார்ப்பு 2. நிலாச்சாரல் 3. கவிமலா் 4. சுபம் விதைகள் 5. தீபம் விதைகள் 16. மருத்துவம் 1. ஹாய் நலமா? 2. ஈகதை-சித்த மருத்துவம் 17. நூலகம் 1. விருபா 2. காந்தளம் தமிழ் நூல் 3. சென்னை நூலகம் 4. எனி இந்தியன் 18. திருமணம் 19. பல்சுவை 1. முத்துக்கமலம் 2. கீற்று 3. மடழோவியம் 4. பதிவுகள் 5. மரத்தடி 6. தமிழ்சிகரம் 7. இதய நிலா 8. தமிழ் விசை 9. மன ஓசை 20. பாலியல் உறவு ஈகரை மன்மத ரகசியம் 21. சங்க அமைப்புகள் 1. தமிழ் இசைச் சங்கமம் 2. வாசிங்டன் வட்டாரத் தமிழ் சங்கம் 3. ரியாத் தமிழ் சங்கம் 4. சந்நிதியான் ஆச்சிரமம் 5. மதுக்கூர் இணையம் 6. உரும்பிராய் இணையம் 7. சித்தாள் கோட்டை 22. திரட்டிகள் 1. தமிழ் மணம் 2. திரட்டி 3. தேன் கூடு 4. தமிழ் வெளி 5. சங்கமம் 6. தமிழ் பாரதி இணையத்திலே தோன்றி வெளிவரும் தமிழ் மின்-இதழ்கள் 1. தட்சு தமிழ் 2. பதிவு.காம் 3. தமிழ்சினிமா.காம் 4. தமிழ்ஈ 5. நிதா்சனம்.காம் 6. வீரகேசாரிஆன்லைன்.காம் 7. யாழிணையம் 8. அறுசுவை 9. தமிழன் எக்சுபிரசு 10. தமிழ்நெட் 11. தமிழ்க்கூடல்.காம் 12. சினிமாஎக்ச்பிரசு(ஒருங்குகுறி) 13. தேனி.இலங்கை.காம் 14. தமிழ்மணம் 15. தமிழ்பிலிம்கிளப் 16. புதினம் 17. பதிவுகள் கனடா மாத இதழ் 18. சங்கதி 19. அதிர்வு 20. சுடரொளி 21. தமிழஆர் 22. சுவிசுமுரசம் 23. மட்டுஈழநாதம் 24. பரபரப்பு 25. முழக்கம் 26. கனடாமுரசு 27. சுதந்திரம் 28. ஈழமுரசு 29. ஈரநாதம் 30. தமிழ்நாதம் 31. லங்காசிறீ 32. தமிழ்தகவல்மையம் 33. சுரதா 34. தமிழ்நியூசு.டிகே 35. சற்றுமுன் 36. வணக்கம்மலேசியா 37. அலைகள் 38. தென்செய்தி 39. நோர்வேதமிழ் 40. ஈழதமிழ் 41. நெருடல் 42. தமிழ்விண் 43. விருபா 44. சோதிடபூமி 45. குவியம் கனடா மாத இதழ் 46. நாதம் 47. தமிழோவியம் இந்தியா மாத இதழ் 48. அப்பால்தமிழ் பிரான்ஸ் இதழ் 49. வார்ப்பு(கவிதைஇதழ்) இந்தியா மாதைருமுறை இதழ் 50. நெய்தல் 51. கவிமலா் இந்தியா 52. இளமை 53. தமிழமுதம் 54. நிலாச்சாரல் இந்தியா வார இதழ் 55. தமிழம் இந்தியா மாதைருமுறை இதழ் 56. எழில்நிலா 57. வானவில் 58. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்) 59. திசைகள் இந்தியா மாத இதழ் 60. அம்பலம் 61. ஆறாம்திணை 62. மரத்தடி இந்தியா மாத இதழ் 63. தமிழெழுதி 64. தமிழ்முரசு(சிங்கப்பூர் ஒருங்குகுறி) 65. அமுரசுரபி 66. கலைமகள் 67. தமிழகம்.காம் 68. மஞ்சரி 69. ஈழவிசன் 70. தமிழ்ஆசுதிரேலியா 71. எரிமலை 72. இன்தாம் இந்தியா மாத இதழ் 73. வரலாறு 74. மொழி 75. செம்பருத்தி மலேசியா 76. தமிழமுதம் 77. தாயகப்பறவைகள் 78. கீற்று 79. சூரியன் 80. திண்ணை இந்தியா மாத இதழ் 81. புதுச்சேரி.காம் 82. உண்மை 83. புதுவிசை 84. தமிழரங்கம் 85. தமிழ்வாணன் 86. தமிழகம்.நெட் 87. கீற்று வழங்கும் இணைப்புகள் 1.கவிதாசரன் 2. கருஞ்சட்டைத் தமிழா் 3. புதியகாற்று 4. அணி 5. அணங்கு 6. குதிரைவீரன்பயணம் 7. விழிப்புணா்வு 8. தீம்தரிகிட 9. கதைசொல்லி 10. புதுவிசை 11. கூட்டாஞ்சோறு 12. அநிச்ச 13. புதுஎழுத்து 14. உங்கள்நூலகம் 15. புதியதென்றல் 16. வடக்குவாசல் 17. புன்னகை 18. உன்னதம் 19. புரட்சிபெரியார் முழக்கம் 20. தலித்முரசு 88. கருத்து 89. சித்தா்கோட்டை 90. பொய்கை 91. கௌமாரம் 92. தமிழ்வலை 93. மலேசியநண்பன் 94. கணையாழி 95. கணியத்தமிழ் 96. தமிழ்முதுசொம் 100. தென்றல் 101. பதியம் 102. தமிழ்வெப்துணிமா 103. ஊடறு 104. முத்துக்கமலம் 105. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம் 106. கணித்தமிழ் 107. சத்யம் 108. முதுகுளத்தூர் 109. ஆன்லைன்உதயம் 110. வலம்புரி 111. பாரீஸ்தமிழ் ஏப்ரல்17 - 2007 112. தேசக்காற்று 113. புகலிடப்புத்தகம் இந்தியா மாதைருமுறை இதழ் 114. இசங்கமம் இந்தியா மாத இதழ் 115. வெப்தமிழன் இந்தியா வார இதழ் 116. உலகத்தமிழோசை கனடா மூன்றுமாத இதழ் 117. அப்புசாமி இந்தியா சிரிப்பு இதழ் 118. நுட்பம் கனடா கலாண்டு இதழ் 119. இன்பிட் இந்தியா மாத இதழ் 120. நான்காம்தமிழ் இந்தியா வார இதழ் 121. அமுதசுரபி இந்தியா மாத இதழ் 122. வாரசுரபி இந்தியா வார இதழ் 123. இஸ்லாமிய இணையம் இந்தியா மாத இதழ் 124. திருமறைத்தீபம் நியூசிலாந்து காலாண்டு இதழ் 125. அருள்பூமி இந்தியா மாத இதழ் 126. வலைத்தமிழ் இந்தியா 127. சிறகு இந்தியா வார இதழ் 128. தமிழ்மண் இந்தியா மாத இதழ் 129. அன்னை இந்தியா மாத இதழ் 130. சக்தி மாத இதழ் 131. அரும்பு இந்தியா மாத இதழ் 132. நிலவு அச்சு வடிவிலிருந்து பிறகு இணையத்தில் ஏறிய இணைய நாளிதழ்கள் 1. தினமலா் 2. தினகரன் 3. தினத்தந்தி 4. தி-இந்து 5. மாலைமலா் 6. தினமணி 7. தினக்குரல் 8. தமிழ்முரசு 9. மாலைச்சுடா் 10. ஒருபேப்பா் 11. முரசொலி 12. தினபூமி 13. தாய்நாடு அச்சிலும் இணையத்தில் வெளிவரும் இணைய இதழ்கள் 1. குமுதம் 2. ஆனந்தவிகடன் 3. வெப்புலகம் 4. பி.பி.சிதமிழ் 5. சிபிதமிழ் 6. தமிழ்பிலிம் மியூசிக் 7. விடுதலை 8. கல்கி 9. காலச்சுவடு 10. உயிர்மை 11. நக்கீரன் 12. தி.க.பொரியார் 13. திராவிடா் 14. முத்தமிழ்மன்றம் 15. மங்கையா்மலா் 16. முத்தமிழ்ச்சங்கம் 17. புதியதலைமுறை 18. புதியதலைமுறைகல்வி 19. பனுவல் 20. ஆய்தஎழுத்து 21. உலகத் தமிழ் இந்தியா மாதைருமுறை இதழ இவ்வாறு பல்வேறு இணைய இதழ்கள் இணையத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றது. இவற்றின் மூலம் தமிழ்மொழியானது பல்வேறு நிலைகளில் வளா்ந்து வருகிறது என்பதை அறியமுடிகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழ் மொழிக்கென தனியொரு இணையதளத்தை உருவாக்க 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகமுமி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் இரண்டும் சோ்ந்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள ஆராய்ச்சிகளை (ஆய்வியல் நிறைஞா், முனைவா் பட்டம்) இணைக்க முயா்ச்சியினை மேற்கொண்டுள்ளது. இதனால் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவா்களுக்கு எந்தவித சிரமுமில்லாமலும் காலவிரையமும் தவிர்க்கப்படுவதால் தங்களுக்கு ஆராய்ச்சியினை விரைந்து முடிக்கவும் இவ்விணையதளம் பயன்படும் என்பதில் ஐயமில்லை. முடிவுரை ஒவ்வொரு காலச் சூழ்நிலைகளிலும் தகவல்தொடா்பு மிகச் வளா்ச்சி அடைந்தாலும் இன்று இணையத்தின் வழி இத்தகவல்தொடா்பு பணியானது மிகவும் அசுர வேகத்தில் மிகப்பரிய வளா்ச்சி நிலையை அடையும் என்பதே அசைக்க முடியாதை ஆணித்தரமான நம்பிக்கையாகும். மேலும் இணையத்தின் வழியில்தான் உலகளாவிய அளவில் உள்ள மக்களின் இலக்கியங்கிளில் பதிவாகும் பண்பாடு, நாகரீகம் முதலியவற்றை அறிந்து கொள்ள தகவல் தொடா்பு சாதனமாக உள்ள இணைய இதழ்கள் உதவுகின்றது. எதிர் காலங்களில் தகவல்தொடா்பு துறை பல்வேறு முறைகளில் வலம் வந்து உலக நாடுகளிலுள்ள அனைத்து மக்களின் அனைத்து தேவைகளையும் இணையம் போக்கும் என்கின்ற சட்டத்தினை எடுக்கும் வண்மை படைத்த ஒரு துறையாக மாறி இலக்கியங்களுக்கு மிகப்பொரிய தொண்டினை இணைய இதழ்கள் தொடா்ந்த வண்ணமாக இருக்கும் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. இதற்காக மத்தியை மாநில அரசுகளும் தங்களுடைய பங்கினை அளித்து வருகிறது. துணை நூற்பட்டியல் 1. தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோபீட்டா் 2. அறிவியல் தமிழ் - டாக்டா் வா.செ.குழந்தைசாமி 3. மின் தமிழ் 4. இண்டா்நெட் உலகில் தமிழ், தமிழன், தமிழ்நாடு - ரிஷபம் பதிப்பகம். 5. தமிழில் இணைய இதழ்கள் - அண்ணா கண்ணன் 6. தமிழ் இணையச் சிற்றிதழ்கள் - தேனி.எம்.சுப்பிரமணி

தமிழ் இணைய இதழ்களின் இலக்கிய பங்களிப்பு (கீற்று, பதிவுகள், நிலாச்சாரல்) முன்னுரை ஒவ்வொரு இலக்கியத்தின் வளர்ச்சியனாது அவ்விலக்கியத்திற்கு கருவியாகயிருக்கும் மொழியைச் சார்ந்து. அவ்வாறு தோன்றிய செம்மொழியாக பல்லாயிரம் ஆண்டுகளாக அட்சய பாத்திரமாய் தமிழ் மொழியானது விளங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பரணியில் தவழும் தமிழ்மொழி பல ஆண்டுகளில் ஓலைச்சுவடி, கல்வெட்டு என்ற பல படிநிலைகளிலிருந்து பயணித்த பின்னர் ஐரோப்பியரின் படையெடுப்பின் காரணமாக அச்சு இயந்திரங்கள் வரத்தொடங்கியது. அன்றைய காலத்தில் அவ்வியந்திரத்தை ஆச்சர்யமாக மக்கள் பார்த்து திகைத்தனர். அவ்வாறு தோன்றிய அச்சு இயந்திரத்தின் வரவால் ஓலைச்சுவடி கல்வெட்டு போன்றவைகள் செல்லறிப்பு, பிற சிதைவுகளுக்கு ஆட்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அவ்வகை நிலைகளிலிருந்து மீண்டு அச்சி பொறிகளின் மூலமாக காகிதங்களில் பதிந்து தனக்கான தடங்களை ஏற்படுத்திக் கொண்டது. அச்சுக்களின் மூலம் கடந்த மூன்று (18,19,20) நூற்றாண்டுகளில் ஏராளமான நூல்கள் தோன்றி தமிழ் மொழியின் அடுத்தக்கட்ட நிலை ஏற்பட வழிவகை செய்தது. இந்நூற்றாண்டின் அறிவியலின் அசுர வளர்ச்சியால் (இயல்,இசை,நாடகம்) முத்தமிழாக இருந்த தமிழ் அறிவியல் தமிழ் என்ற நான்காம் தமிழாக வளர்ந்தது. பின்னர் கணிப்பொறியின் வருகையால் மேலும் கணினித் தமிழ் மொழியானது. ஒரு பிரளயமாக வளா்ந்த கணினியோடு தொடர்புடைய இணையம் தோற்றம் பெற்றவுடன் இணையத் தமிழ்மொழிக்கு கற்பக விருச்சமாக பெரும் தொண்டாற்றி வருகிறது. இணையம் என்ற படகானது கடல் என்ற கணினியில் பயணிக்க தொடங்கி 2014 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடிவருகிறது. தமிழர்களுக்கு எடுத்துச் சென்ற பெரும் பங்கு உண்டு. அவ்வாறு தமிழ் இலக்கியத்திற்கு தொண்டாற்றிய இணைய இதழ்களில் கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவற்றின் இலக்கியப் பங்களிப்பினை பற்றி இவ்வாய்வேடு ஆய்வாக ஆராயப்பட உள்ளது. ஆய்வுத் தலைப்பு தமிழ் மொழியில் அச்சில் வெளிவரும் இதழ்கள் பற்றிய ஆய்வு அதிகளவில் வெளிவந்துள்ளது. கணினி அறிவியல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி பெற்ற இணையத்தில் ஏராளமான இணைய இதழ்கள் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக வெளிவந்த வண்ணமாக உள்ளது. அவ்வாறு வெளிவரும் இணைய இதழ்களில் இலக்கியம் தொடா்பாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் இதழ்கள் மிகச்சிலவேயாகும். அவற்றில் கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகிய மூன்றும் தமிழிலக்கியத்திற்கு எங்ஙனம் பங்காற்றியுள்ளது என்பதற்காக ”தமிழ் இணைய இதழ்களின் இலக்கியப் பங்களிப்பு (கீற்று, பதிவுகள், நிலாச்சாரல்) என்ற தலைப்பு இங்கு ஆய்வுத் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் களம் தமிழ் மொழியனாது இணையத்தில் பயணித்து இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் இணையத்தில் தமிழ் இலக்கியம் தொடர்பாக பல்வேறு இதழ்கள் தனது பங்களிப்பினை அளித்து வருகிறது. அவ்வாறு வெளிவரும் இணைய தமிழ் இதழ்களில் கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகிற மூன்று இணைய இதழ்கள் தமிழிலக்கியத்திற்கு ஆற்றிவரும் இலக்கிய பங்களிப்பு இங்கு ஆய்வுக்களமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆய்வு நோக்கம் தமிழ் இணைய இதழ்களின் இலக்கிய பங்களிப்பு என்னும் ஆய்வானது விளக்கமுறை, ஒப்பிட்டுமுறை ஆய்வாக அமையும். அச்சின் மூலம் தோன்றிய நூல்களான சங்ககால இலக்கியம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் அதிக எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன. கணினியுக புரட்சியால் உதயமான இணையத்தில் ஏராளமான பொருண்மைகளில் படைப்புகள் உருவாகிக் கொண்டேயுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள இலக்கிய வகைமைகள் சிற்சில. காலமாற்றத்திற்கு தகுந்தாற்போல ஆராய்ச்சியில் புதுமையினை ஏற்படுத்தும் நோக்கத்திலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் படைப்பாளிகளின் இலக்கிய பதிவுகள் எங்ஙனம் இணைய இதழ்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு இடம்பெற்றுள்ள இலக்கியம் பதிவுகளை உலகெங்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் படித்துணரவும், பகிர்ந்துணரவும் வழிவகை செய்யும் இணைய தமிழ் இதழ்கள் உதவுகின்றன. மேலும், இணையத்தில் வெளிவரம் இணைய இதழ்கள் எவ்வாறு வளர்ச்சி பெற்று தமிழ் இலக்கியத்திற்கு எங்ஙனம் தனது பங்களிப்பினையும், பயன்பாட்டினையும் ஆற்றியுள்ளது என்பதையும், எப்படிப்பட்ட தாக்கத்தினை இந்நூற்றாண்டில் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் கொண்டு இந்த ஆய்வின் நோக்கமாக அமைகின்றது. ஆய்வின் எல்லை தமிழ் மொழியில் ஏராளமான இணைய இதழ்கள் தோன்றி இணையத்தில் மட்டும் வெளிவருகின்ற கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகிய மூன்று இணைய தமிழ் இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், சுவடுகள், தமிழ் வளர்க்கும் அறிஞர்கள், கதைகள் போன்ற பல பொருண்மைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவற்றில் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்கள் இங்கு ஆய்வு எல்லையாக அமைகின்றது. ஆய்வின் மூலங்கள் தமிழ் இணைய இதழ்களின் இலக்கிய பங்களிப்பு இவ்வாய்விற்கு துணைநின்ற சான்றுகளை வைத்து முதன்மைச் சான்றுகள் என்றும், துணைச் சான்றுகள் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மைச் சான்றுகள் இணையத்தில் வெளிவருகின்ற இணைய தமிழ் இதழ்களான கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகிய மூன்று இணைய இதழ்கள் இங்கு முதன்மைச் சான்றுகளாக அமைகின்றது. துணைச் சான்றுகள் உலக முழுவதும் இணையத்தில் வெளிவருகின்ற ஏனைய இதழ்கள் கணினி மற்றும் இணையம் தொடர்பான நூல்கள், இணைய மாநாட்டுக் கட்டுரைகள், தமிழ் இணைய அறிஞர்களின் வலைப்பக்கங்கள், திரட்டிகள், சமூக தளங்கள், தரவுத் தளங்கள், அச்சில் வெளிவரும் இதழ்கள், தமிழ் விக்கிப்பீடியா, ஆய்வுக் கட்டுரைகள், முனைவர் பட்ட ஆய்வேடுகள் ஆகியவைத் துணைச் சான்றுகளாக அமைகின்றது. ஆய்வின் மொழிநடை தமிழ் இணைய இதழ்கள் தொடர்பான இவ்வாய்வில் கணினி, இணையம் போன்றவை இடம்பெரும் இடங்களில் அவற்றைப் பற்றிய கலைச் சொற்களும் தேவைக்கருதி ஒருசில ஆங்கில சொற்களும், அவற்றின் சுருக்கக் குறியீடுகளும் இவ்வாய்வின் மொழிநடையானது கையாளப்பட உள்ளது. ஆய்வின் இயல்பாகுபாடு தமிழ் இணைய இதழ்களைப் பற்றிய இவ்வாய்வானது முன்னுரை முடிவுரை நீங்களாக ஐந்த இயல்களாக பகுக்கப்பட்டுள்ளது. இயல் 1 இணைய வரலாறு இயல் 2 இணையத்தில் தமிழ் அறிமுகம் இயல் 3 இணைய தமிழ் இதழ்கள் இயல் 4 ஆய்வு இதழ்களின் வகைப்பாடு (கீற்று, பதிவுகள், நிலாச்சாரல்) இயல் 5 இலக்கிய பங்களிப்பு கீற்று, பதிவுகள், நிலாச்சாரல்) இயல் 1 இணைய வரலாறு என்னும் இவ்வியலில் செய்தி வரையறை, தகவல் வரையறை, தகவல் தொடர்பு, மின்ன்னு, சாதனங்கள், இணையம் வரையறை, தரவுத் தளம், தரவுத் தளத்தின் கூறுகள், இணையதளம், வலைப்பின்னல், அதன் வகைகள், இணையப் பக்கங்கள், இணைய வரலாறு, தோற்றம், வளர்ச்சி, இணையத்தை பயன்படுத்திய தன்மைகள் முதலியவை இங்கு இடம் பெற்றுள்ளது. இயல் 2 இணையத்தில் தமிழ் அறிமுகம் என்னும் இவ்வியலில் கணினியில் தமிழ் அறிமுகம், இணையத்தில் தமிழ், தமிழ் ஒருங்குகுறி, அவை உருவாவதற்கான முயற்சிகள், ஒருங்குகுறி சிக்கல்கள், தமிழ் எழுத்துரு மொன்பொருட்கள், தமிழ் இணையத்தில் வளர்ச்சியடைந்த நிலை, மின்நூலக வரலாறு, மின்நூலகம், மொழிபெயர்ப்பு, மின வானொலி, இணைய கல்வி கற்றல் கற்பித்தல், இணையப் பல்கலைக்கழகம், இணைய வணிகம், இணை ஒழுக்கம் போன்ற பொருண்மைகளிலும் இவ்வாய்வானது அமைய்யுள்ளது. இயல் 3 இணையத் தமிழ் இதழ்கள் என்ற தலைப்பு மூன்றாவது இயலில் இடம்பெற்றுள்ளது. இவ்வியலில் இணையத்தில் இன்று ஏராளமான இதழ்கள் நாளுக்கு நாள் உதயமாகி வெளிவந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வெளிவரும் இணைய இதழ்கள் நாளிதழ்கள், வார இதழ்கள், வார இருமுறை இதழ்கள், மாத இதழ்கள் என்ற நிலையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வெளிவரும் இணைய இதழ்களில் அச்சில் வெளிவரும் இணைய இதழ்கள். இணையத்தில் மட்டும் வெளிவரும் இணைய இதழ்கள், அச்சிலும் இணையத்திலும் வெளிவரும் இணைய இதழ்கள் ஆகியவற்றை இவ்வியலில் விளக்கப்பட உள்ளது. மேலும் திரட்டிகள், வலைப்பு, வலைப்புக்கள் உருவாக்கம் இணைய இதழ்களின் பயன்கள் ஆகியனவும் விளக்கப்பட உள்ளது. இயல் 4 கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகிய இதழ்களின் வகைப்பாடு என்னும் தலைப்பு நான்காம் இயலாக இடம்பெற்றுள்ளது. இவ்வியலில் ஆய்வு இதழ்களான கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் இம்மூன்று இணைய இதழ்களின் தோற்றம், எங்கிருந்து வெளிவரகிறது, அவை ஒவ்வொன்றின் வகைப்பாடுகள், இணைப்பு இதழ்கள் போன்றவற்றை இங்கு விளக்கமாக கூறப்பட உள்ளது. இயல் 5 கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகிய இதழ்களின் இலக்கிய பங்களிப்பு என்னும் தலைப்பு ஐந்தாம் இயலாக இடம்பெற்றுள்ள கதை, கட்டுரை, சிறுகதை, இலக்கியம் தொடர்பான கருத்துகள், கணினித் தமிழ், இணையத் தமிழ், தமிழ் அறிஞர்களின் விமர்சனம் போன்றவை தொடர்பான செய்திகள் விளக்கமாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கப்பட உள்ளது. முடிவுரை மேற்கண்ட ஐந்த இயல்களின் முடிவுகள் தொகுத்துத் தரப்படுகின்றன. அமெரிக்க இராணுவத்தினால் தோன்றிய இணையம் எதிர்வரும் காலங்களில் அவற்றின் பயன்பாடுகள் பல்வேறு படிநிலைகளை அடையும். அவற்றினால் தமிழ் இணைய இதழ்களின் பங்களிப்பு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ச்சி நிலையினை அடைந்த வருகிறது. இணையம், வலைப்பின்னல் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஆய்வு இதழ்களான கீற்று, பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவை பற்றியும் அவற்றின் இணைப்பு இதழ்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைப்பட்டுள்ளது. அச்சு இதழ்களும், இணைய இதழ்களும் விரிவாக கூறப்பட்டுள்ளது. இணைய இதழ்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் அடங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இணையம் இல்லா வீடு இருண்ட வீடு என்ற இல்லாத நிலையை ஏற்படுத்த எதிர்வரும் நாட்களில் அனைவரும் பயன்படுத்த முன்வர வேண்டும். எதிர்கால ஆய்வுகள் 1. தமிழ் மின் நாளிதழ்களின் இலக்கிய பங்களிப்பு 2. மின் ஆவணக்காப்பகம் மற்றும் படக்காட்சி ஆராய்ச்சி 3. மின்நூலக வரலாறு மற்றும் உருவாக்கம்

naga